டெல்லியில் 24 மணி நேரத்தில் 2008 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 50 பேர் பலி

--

டெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,02,831 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 50 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். டெல்லியில் தற்போது 25,449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.