10 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்த டெல்லி அணி!

ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்யும் டெல்லி அணி, 11 ஓவர்களில் 105 ரன்களை எடுத்து 1 விக்கெட் மட்டுமே இழந்துள்ளது.

கொல்கத்தா அணி கேட்டுக்கொண்டதற்கேற்ப, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர் பிரித்விஷா, 36 பந்துகளில் 54 ரன்களை எடுத்து ஆடி வருகிறார்.

மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் 16 பந்துகளில் 26 ரன்களுக்கு அவுட்டானார். களத்தில் இருக்கும் மற்றொரு வீரரும் கேப்டனுமான ஷ்ரேயாஸ், 15 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ஆடி வருகிறார்.

கைவசம் அதிக விக்கெட்டுகள் இருப்பதால், கடைசி நேரத்தில் டெல்லி அணி பெரிய அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.