தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான மதிப்புள்ள ரூபாய் மாம்பழங்கள் எடுத்த சென்ற கும்பல்….

புதுடெல்லி:

தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் கும்பலாக வந்து எடுத்து சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

வடக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை செய்பவர் சோட்டே. இவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான ரூபாய் மாம்பழங்களை கும்பலாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பழ விற்பனை செய்த இடத்திற்கு அருகே ஒரு கும்பல் சண்டையிட்டது. இதையடுத்து நான எனது பழ வண்டியை அவசரம் அவசரமாக அங்கிருந்து நகர்த்தினேன். அதில் வண்டியில் இருந்த மாம்பழங்கள் பெட்டியுடன் கீழே விழுந்தன. பழப்பெட்டிகள், கீழே விழுந்து கிடப்பதை பார்த்த அந்த வழியாகச் சென்ற சிலர், அதை எடுத்து கொடுத்து உதவாமல், அதிலிருந்த பழங்களை தங்களால் முடிந்த அளவுக்கு அள்ளி சென்றனர் என்றார்.

இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானாது.

இதுகுறித்து அந்த மேலும் பழவியாபாரி தெரிவிக்கையில், என்னிடம் சுமார் ரூ. 30,000 மதிப்புள்ள 15 கிரேடு மாம்பழங்கள் இருந்தன. அவை அனைத்தையும் எடுத்துக் சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லி காவல்துறையை கட்டுப்படுத்தும் மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மக்கள் விதிகளை மீற விடக்கூடாது என்றும் ஒரு குறிப்பை அனுப்பியுள்ளது.

நீங்கள் பாதிக்கப்பட்ட பழ வியாபாரி சோட்டிற்கு உதவ விரும்பினால், நீங்கள் இங்கே ஒரு பங்களிப்பை செய்யலாம்:

வங்கி: எஸ்பிஐ
முதல் பெயர்: சோட்
கடைசி பெயர்: சோட்
கணக்கு எண்: 34893542126
IFSC: SBIN0016733

குறிப்பு:

எந்தவொரு வணிக நோக்கமும் இல்லாமல், இந்த தகவல் நம்பிக்கை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நன்கொடையாளர் அளித்த நன்கொடைகள் உரிய நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. நன்கொடை அளிப்பதற்கு முன் பிற விவரங்களை சரிபார்க்குமாறு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். பத்திரிகை டாட் காம் மற்றும் / அல்லது அதன் ஊழியர்கள் இதற்கு பொறுப்பேற்க மாட்டார்கள்.