ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்தி டில்லி வெற்றி

மும்பை:

ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. லெவிஸ் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர், இஷான் கிஷான் அதிரடியாக 23 பந்தில் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் எடுத்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டில்லி அணி களம் இறங்கியது.

இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இது டில்லி அணிக்கு கிடைத்த முதலாவது வெற்றியாகும்.