டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலையில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை இன்று நடத்தப்பட்டது. அப்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

இப்போது காய்ச்சலோ, வேறு எந்த பிரச்சனையும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். உங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்று, மீண்டும் பணிக்கு திரும்புவேன் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.