கொரோனா பாதிப்புக்குள்ளான டில்லி துணை முதல்வருக்கு மூச்சுத் திணறல்

டில்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு கொரோன தொற்று உறுதி ஆனது.

அதையொட்டி அவர் கடந்த 14 ஆம் தேதி முதல் வீட்டில் தனிமையில் இருந்தார்.

அவருக்குக் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் அதிகரித்துள்ளது.

இதையொட்டி அவர் டில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சிகிச்சை பெற்று வருகிறார்.