டெல்லியில் இளம் மருத்துவர் கொரோனா அறிகுறிகளுடன் பலி: டெஸ்ட் ரிப்போர்ட் நெகட்டிவ்

டெல்லி: டெல்லியில் மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்.

டெல்லியின் மவுலானா ஆசாத் பல் மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது மருத்துவர் அவர். பெயர் அபிஷேக் பயானா. 2 முறை கொரோனா நெகட்டிவ் என்று அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரிய வந்தது.

டாக்டர் அபிஷேக் பயானா கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அனைத்து பொதுவான அறிகுறிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் இறக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு, மார்பு நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதாக கூறினார்.

எனக்கு சுவாச பிரச்சினைகள் உள்ளன. அறிகுறிகள் அனைத்தும் கொரோனாவை கொண்டவை. நான் பாசிட்டிவ் ஆக தான் இருப்பேன் என்று தமது மூத்த சகோதரர் அமனிடம் பேசும் போது தெரிவித்தார்.

அவருக்கு கொரோனா தொற்றுக்கான அனைத்து அறிகுறிகள் இருந்தாலும் அவருக்கு செய்யப்பட்ட சோதனைகளில் கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. அவர் ஹார்ட் அட்டாக்கில்தான் இறந்தார் என்று அவர் பணியாற்றிய மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறி உள்ளார்.

ஆனால் பயானாவின் குடும்பத்தினர், அவருக்கு 10 நாட்களுக்கு முன்பே காய்ச்சல் இருந்துள்ளது. மூச்சுத் திணறல் இருப்பதால் அறிகுறிகள் மார்பு தொற்று இல்லை என்று அபிஷேக் கூறிக்கொண்டே இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி