டில்லி : 14 வாகனங்களை தீயிட்டு கொளுத்திய போதை இளைஞர்

டில்லி

டில்லி நகரில் ஒரு இளைஞர் குடி போதையில் 18 வாகனங்களை தீயிட்டு கொளுத்தி உள்ளார்.

தெற்கு டில்லியில் உள்ளது மதாங்கிர் என்னும் பகுதி. இந்தப் பகுதியில் ஒரு வளாகத்தில் வாகனங்கள் சில நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனநிறுத்தத்தில் திடீரென தீ பிடித்த்தாக வந்த செய்தி கேட்டு காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் வந்து தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 14 இருசக்கர வாகனங்களும் 4 கார்களும் எரிந்துள்ளன. அதில் எட்டு இருசக்கர வாகனங்களும் 2 கார்களும் முழுமையாக எரிந்து விட்டன. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு காமிரா மூலம் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த பதிவின்படி நேற்று அதிகாலை சுமார் 3.05 மணிக்கு ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் அங்கு வருகிறார். அந்த இளைஞர் தடுமாறி நடப்பதில் இருந்து அவர் மது போதையில் உள்ளது தெரிய வருகிறது. அவர் அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த 6 இருசக்கர வாகனங்களின் எரிபொருள் குழாயை உருவுகிறார்.

பெட்ரோல் கீழே ஓடுகிறது. அந்த பெட்ரோலில் எரியும் தீக்குச்சியை விசுகிறார். மளமளவென தீ பரவி அங்கிருந்த 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிகின்றன. அந்த இளைஞர் அங்கிருந்து ஓடுகிறார்.

இந்த பதிவான காட்சிகள் மூலம் அந்த இளைஞரை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.