டில்லியில் புழுதி புயல்…விமானம், ரெயில் சேவை பாதிப்பு

டில்லி:

டில்லியில் இன்று திடீரென புழுதி புயல் வீசியது. இதனால் டில்லியின் பெரும்பாலான பகுதிகள் புழுதியால் சூழப்பட்டது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்&டில்லி இடையிலான தனியார் விமானம் அமிர்தசரஸ் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவையும் பாதித்துள்ளது.

உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிந்திருந்த நிலையில் டில்லியில் புழுதி புயல் வீசியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலால் சுமார் 100 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.