டில்லியில் நிலநடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கின! மக்கள் பீதி!

டில்லி:

ந்திய தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம்  உணரப்பட்டது.  இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம், டில்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலம் பவால் நகர் பகுதியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.  பூமிக்கடியில் 10.கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிகொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

 

You may have missed