டெல்லி:

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி, 28% அளவிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, 6.28 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்த நிலையில் தற்போது 28 சதவிகிதத்தை அடைந்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 22ம் தேதியுடன் முடிவடைவதால், தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பாஜக மூத்த தலைவர் அத்வானி வாக்களித்தனர்

டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதிக்கு உள்பட்ட நிர்மன் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தனது வாக்கினை செலுத்தினார். இந்த தொகுதியில் பாஜகவின் சுனில் யாதவ் மற்றும் காங்கிரஸின் ரோமேஷ் சபர்வால் களமிறங்கி உள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் அவரது மகள் பிரதிபா அத்வானி ஆகியோர் அவுரங்கசீப் பாதையில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், மும்முனைப் போட்டிகள் நிலவி வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு  762 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்,

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 10 மணி நிலவரப்படி 4.33 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், காலை 11 மணி அளவில் 6.28 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. தற்போது மதியம் 2 மணி அளவில் 28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.