டில்லி

டில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனை செய்த குளறுபடியால் ஒரு குடும்பத்தினர் வேறொருவரின் சடலத்தை புதைத்துள்ளனர்.

டில்லியை சேர்ந்த ஐஜாசுதின் என்பவர் தனது அண்ணன் மொய்னுதீன் என்பவரைக் கடந்த 2 ஆம் தேதி லோக் நாயக் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  சுமார் 50 வயதாகும் மொய்னுதீனுக்கு இரத்த அழுத்தம் திடீரென அதிகமானதால் அவரை இசிஜி எடுக்க அழைத்துச் சென்றுள்ளனர்.  அங்கு மொய்னுதின் மரணம் அடைந்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட மொய்னுதீனின் மனைவியும் அதிர்ச்சியில்  உயிர் இழந்துள்ளார்.  இந்நிலையில் மொய்னுதீனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  அந்த முடிவு வந்த பிறகே அவர் சடலத்தை அளிக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.   மொய்னுதீனுக்க்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யபபடதால் ஐந்தாம் தேதி அன்று உடலை பெற்றுக் கொள்ள ஐஜாசுதின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட மொய்னுதீனின் சடலத்தின் அறிக்கையில் இறந்தவர் வயது 70 என இருந்துள்ளது.  இதையொட்டி சந்தேகப்பட்ட அவர் இது குறித்து  புகார் அளித்துள்ளார்.  அப்போது மொய்னுதீன் என்னும் பெயருள்ள மற்றொருவரின் மகனான கமாலுதின் என்பவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது   முதியவர் மொய்னுதீன் டயாலிசிஸ் சிகிச்சை பெற வந்த போது உயிர் இழந்துள்ளார் .

அதன் பிறகு விவரம் தெரிந்து அங்கு வந்த கமாலுதீன் தனது தந்தைக்கு இரண்டாம் முறை ஈமச்சடங்கு செய்து உண்மையான உடலைப் புதைத்துள்ளார்.   மருத்துவமனையில் கமாலுதீன் உடலைப் பற்றி சந்தேகம் தெரிவித்த போது அவரிடம் இவர்தான் தந்தை எனவும் இறப்புக்குப் பிறகு டயாலிசிஸ் குழாய்களை எடுத்ததால் முகம் மாறியதாக மருத்துவமனையில் சொல்லி விட்டதாகவும் கமாலுதின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஐஜாசுதின் இது குறித்து, “மீண்டும் எனது அண்ணனின் உடலைத் தோண்டி எடுப்பதில் எந்த பயனும் இல்லை.   அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டு அவர் புதைக்கபபட்டுளார்.  ஆனால் காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் கமாலுதின் மீதும் அவர் இவர்கள் மீதும் மாறி மாரி குற்றம் சாட்டுகின்றனர்.  ஆனால் முழு தவறும் மருத்துவமனை ஊழியர்களுடையதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.