டெல்லியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் தீ விபத்து: ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பல்

டெல்லி: டெல்லியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

மோதி நகரில் உள்ள கட்டடத்தில் முதல் மற்றும் 2வது தளத்தில் விலையுயர்ந்த இருசக்கர வாகன விற்பனையகம் செயல்பட்டு வந்தது. இன்று நள்ளிரவு 1.36 மணியளவில் விற்பனையகத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 25 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும், முகமது சதாப், திரேந்திரர், கிரண் மற்றும் ரியா ஆகிய 4 பேரை மீட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  2 தளங்களிலிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

அவற்றின் சேத மதிப்பு விவரங்கள் குறித்து எந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.