ஆம்ஆத்மியின் முதல்விக்கெட் வீழ்ந்தது: டில்லி காந்திநகர் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்….!

டில்லி:

லைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த காந்திநகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இது ஆம்ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும், கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசிகட்ட தேர்தல் இந்த மாதம் (மே) 19 ம் தேதி  முடிவடைந்து, மே 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தலைநகர் டில்லியில் உளள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 6வது கட்ட தேர்தலான மே 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு அரசியல் கட்சிகள் கூட்டணி நடவடிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதில், எந்தவொரு கூட்டணியும் ஏற்படாத நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி தனித்தனியே போட்டியிடுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி காந்தி நகர் எம்.எல்.ஏ., அனில் வாஜ்பாய்  திடீரென இன்று  பாஜகவில் இணைந்தார். டில்லி மாநில பாஜக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் அனில் பாஜ்பாய் இணைந்தார்.

அவருடன் சேர்ந்து மூன்று நகராட்சி ஆம் ஆத்மி கவுன்சிலர்களும் டில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இணைந்தனர்.

கடந்த சில நாட்களாக விஜய்கோயல் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்களதுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய வந்த நிலையில், முதல் விக்கெட்டை பாஜக கைப்பற்றியுள்ளது.

கார்ட்டூன் கேலரி