இந்தியன் 2 வில் இணைந்த டெல்லி கணேஷ்…!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் காஸ்டியும் டிசைனர் அமிர்தா ராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் 29 முதல் தொடர்ந்து 12 நாட்கள் போபாலில் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது .இந்நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் இந்தியன் 2 வில் இணைந்துள்ளார் என தெரிவித்துள்ளனர் .

கார்ட்டூன் கேலரி