Random image

டில்லி அரசுப் பள்ளிகளில் ‘மகிழ்ச்சி பாடத்திட்டம்’ அறிமுகம்

டில்லி:

டில்லியில் அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக ‘மகிழ்ச்சி பாடத்திட்டம்’’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் புத்த மத தலைவர் தலாய்லாமா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வரும். கல்வி துறை பொறுப்பு அமைச்சருமான மனிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தலாய் லாமா பேசுகையில், ‘‘ இந்தியாவில் மட்டும் தான் பழமைவாய்ந்த அறிவுடன் கூடிய நவீன கல்வி முறையை பயிற்றுக்கும் திறன் உள்ளது. இது தான் மனித உணர்வுகளை தீர்த்து வைக்கும். வெறுப்பு, விரோதம் போன்ற எதிர்மறையான எண்ணங்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் விரட்டும் ஆற்றல் இந்த கல்வி முறைக்கு மட்டுமே இருக்கும்’’ என்றார்.

இந்த புதிய பாடத்திட்டம் நர்சரி வகுப்புகள் முதல் 8ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தியானம், மதிப்பு கல்வி, மன நல பயிற்சி, 6 மாத தன்னார்வலர் பயிற்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது. 40 டில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இந்த விழாவில் ஆயிரகணக்கான ஆசிரியர்கள், கல்வி இயக்குனரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.