டெல்லி அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் – ஹோட்டல்களுக்கு அனுமதி!

புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வின் அடிப்படையில், டெல்லி மாநில அரசும் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‍ஹோட்டல்கள் மற்றம் விருந்தோம்பல் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் இதுவரைப் பின்பற்றப்பட்டு வந்த இரவுநேர(10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை) ஊரடங்கு தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மேலும், வாராந்திர பஜார் நடைமுறையை, ‍சோதனை அடிப்படையில் செயல்படுத்தவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விஷயத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கண்காணிக்கப்படும்.

மேலும், வீதியில் விற்பனை செய்யும் நபர்களுக்கு, சோதனை அடிப்படையில், காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை விற்பனை செய்வதற்கு, 1 வாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இனிமேல் அவர்களுக்கு எந்த நேரக் கட்டுப்பாடுகளும் இல்லை.

கார்ட்டூன் கேலரி