வசதி குறைந்த குழந்தைகளுக்காக மழலையர் பள்ளி தொடங்கிய டில்லி அரசு

டில்லி

சதி குறைந்த குடும்பக் குழந்தைகளுக்காக டில்லி அரசு 101 மழலையர் பள்ளிகள் தொடங்கி உள்ளது.

டில்லி அரசு வசதி குறைந்தோருக்காக பல நலத்திட்டங்கள் செய்து வருகிறது.   அதில் ஒரு பகுதியாக மொகல்லா கிளினிக் என்னும் பெயரில் மருத்துவமனைகள் டில்லி அரசு ஏற்கனவே தொடங்கி நடத்தி வருகிறது.   அது தவிர சிறு குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் அங்கன் வாடி மையங்களையும் அரசு நடத்தி வருகிறது.   இவை அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலச் சேவை என்னும் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது.

மனீஷ் சிசோடியா

ஒருங்கிணைந்த குழந்தைகள் நலச் சேவை திட்டம் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.   இந்தத் துறையை கவனித்து வரும் டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா நேற்று 101 மழலையர் பள்ளியை இந்த திட்டத்தின் கீழ் தொடங்கி வைத்துள்ளார்.   வசதி குறைந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்காக இந்தப் பள்ளிகள் இயங்க உள்ளது.

மொகல்லா மழலையர் பள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பள்ளிகளில் மூன்று முதல் ஆறு வயதான குழந்தைகள் சேர்க்கப்பட உள்ளனர்.   இது குறித்து மனீஷ் சிசோடியா, “குழந்தைகள் கருவில் இருக்கும் போதிருந்தே கற்க தொடங்கி விடுகின்றனர்.   ஆனால் அவர்களின் வறுமை காரணமாக அவர்களால் பள்ளிக்கு சிறு வயதில் செல்ல முடியாமல் போகிறது.

அதை மாற்றி வசதியான குழந்தைகளுக்கு சமமாக வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குழந்தைகளும் மழலையர் பள்ளியில் கல்வி கற்க உதவ இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.   தற்போது நடைபெறும் 2 அல்லது 3 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைக இணைந்து  ஒரு பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.   இங்கு தாய்மார்களுக்கும் சத்துணவு மற்றும் ஊட்ட சக்தி மருந்துகள் வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.