டில்லி:

பள்ளி நேரத்தில் இஸ்லாமிய ஆசிரியர்கள் தொழுகைக்கு செல்லக் கூடாது என்று டில்லி அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து டில்லி சிறுபான்மை ஆணைய தலைவர் சராபுல் இஸ்லாம் கான் கூறுகையில், ‘‘டில்லி அரசின் பள்ளி கல்வி துறை ஒரு எழுத்துப்பூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி நேரத்தில் இஸ்லாமிய ஆசிரியர்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளியில் இருந்து செல்ல அனுமதி கிடையாது.

இது மாணவர்களின் நலனை பாதிக்கும். இந்த விதியை மாற்ற முடியாது. மதியம் 1 மணிக்கு தொடங்கும் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் 12.45 மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட் டுள்ளது’’ என்றார்.

முன்னதாக இஸ்லாமிய ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்கு செல்ல அனுமதிகோரி ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். இது தொடர்பாக பள்ளி கல்வி துறை, 3 நகராட்சி நிர்வாகங்களுக்கு ஆணையம் கடிதம் எழுதியது.

இதில் பள்ளி கல்வி துறை மட்டுமே பதிலளித்துள்ளது. நகராட்சிகள் இன்னும் பதிலளிக்கவில்லை. மத்திய உள்துறையின் பதிலை ஆணையம் எதிர்பார்த்து காத்திருக்கிறது என்று சராபுல் இஸ்லாம் தெரிவித்தார்.