காணாமல் போன ஜேஎன்யு மாணவர் நஜீப் வழக்கை முடித்துக்கொள்ள சிபிஐக்கு டில்லி உயர்நீதி மன்றம் அனுமதி

டில்லி:

லைநகரில் உள்ள ஜகஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் நஜீப் அகமது காணாமல் போன விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை முடித்துக்கொள்ள சிபிஐக்கு டில்லி உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜேஎன்யுவிலல் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது, ஆர்எஸ்எஸ் இயக்கத் தின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்த சிலருடன் நஜீப் அகமது மோதலில் ஈடுபட்டதாகவும், அதைத் தொடர்ந்து, விடுதியில் தங்கியிருந்த நஜீப் அகமது என்ற மாணவர் மாயமானதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், டில்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட னர். அதில் எந்தவித   முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து வழக்கு  சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், மாயமான நஜீப் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மாயமான நஜீப்பின் தாய் டில்லி உயர்நீதி மன்றத்தில் தனது மகன் குறித்த தகவலை தெரிவிக்கும்படி வழக்கு தாக்கல் செய்தார். அதை  டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சிபிஐ அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தது.

ஜேஎன்யு மாணவர் நஜீப் அகமது மாயமான விவகாரத்தில் எந்தத் தடயமும் இதுவரை கிடைக்காததால் அந்த வழக்கை முடித்துக் கொள்வது குறித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்க விரும்புகிறது என்றார்.

அதைத்தொடர்ந்து, நஜீப் காணாமல் போன விவகாரம் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐக்கு நீதிபதிகள்  அனுமதியளித்தனர்.

உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நஜீப்பின் தாயார், பாத்தீமா நஃபீஸ் கூறும்போது, டில்லி,  உயர்நீதி மன்றத்தின் உத்தரவுதனது  இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. சிபிஐயின் விசாரணை பாரபட்சமாகவும், எனது மகனை தாக்கியவர்களை காப்பாற்றும் விதமாகவும் இருந்தது. எனது மகனுக்கு நீதி கிடைக்கும் வரை நீதித்துறை மீதான நம்பிக்கை தொடரும் என்றார்.