டில்லி

ட்ட விரோதமாக நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கடவுளைப் போய் சேருமா என டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

டில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள பல ஆக்கிரமிப்புக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதில் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ள கோயிலும் ஒன்றாகும்.  இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.   அவைகளை நீதிபதிகள் கீதாமிட்டல் மற்றும் ஹரிசங்கரின் அமர்வு விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது இந்த அமர்வு, “சட்ட விரோதமாக நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கடவுளைப் போய் சேருமா?  அந்தக் கோயில்கள் புனிதத் தன்மை உள்ளதா? என கேள்வி எழுப்பியது.  மேலும் அதே பகுதியில் வாகனம் நிறுத்த சட்ட விரோதமாக அனுமதி அளித்த வடக்கு டில்லி மாநகராட்சிக்கும் தனது கண்டனத்தை தெரிவித்தது.

அது மட்டுமின்றி சட்டபூர்வமாக கட்டப்படாத எந்தக் கட்டிடத்தையும் அது மத பிரார்த்தனை செய்யும் இடமாக இருந்தாலும்  அனுமதி அளித்தது மாநாகராட்சியின் தவறு எனவும் குறிப்பிட்டுள்ளது.