சீக்கியர் தாக்குதல் வழக்கு : மேல் முறையீட்டு மனுக்கள் நிராகரிப்பு

டில்லி

ந்திரா காந்தி கொலப்பட்ட போது சீக்கிய மக்கள் மீது நடந்த தாக்குதல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து அளிக்கபட்ட 88 மேல் முறையீட்டு மனுக்களை டில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று அவருடைய சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் நாடெங்கும் சிக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் நடந்தன. குறிப்பாக டில்லி, உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக பல வழக்குகள் நாட்டின் பல நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் தெற்கு டில்லிய்ல் உள்ள திரிலோக் புரி என்னும் இடத்தில் நடந்த கலவர வழக்கில் கடந்த 1996 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் டில்லி நீதிமன்றம் 88 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.

இதை எதிர்த்து 88 பேரும் டில்லி உயர்நிதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை அளித்தனர். இந்த வ்ழக்கு சுமார் 22 வருடங்களாக நடந்தது. நேற்று இந்த வழக்கில் டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றங்கள் நிருபிக்கப் பட்டுள்ளது. எனவே அவ்ர்களின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அத்துடன் அவர்கள் அனைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது”என தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்க்ளில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.