உமர் காலித்                                                      கன்னையா குமார்

டில்லி

வகர்லால் நேரு பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மேல் எடுத்துள்ள் நடவடிக்கையை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சென்ற வருடம் ஃபிப்ரவரி மாதம் அஃப்சல் குருவை தூக்கில் இட்டதற்கு கண்டனக் கூட்டம் நடத்தினர்.  அப்போது மாணவர் சங்கத்தலைவர் கன்னையா குமார் உட்பட 15 பேர் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.  பல்கலைக்கழகம் அவர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை எடுத்தது.

மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், அனிர்பன் பட்டாசார்யா, அசுதோஷ், உமர் காலித், கார்கி அதிகாரி, முஜீப் ஹுசைன், மற்றும் 9 பேர் மேல் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது.  கன்னையா விடுதியில் இருந்து வெளியே அனுப்ப்பட்டார். உமர் சென்ற வருடம் டிசம்பர் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அனிர்பனுக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் ஐந்து ஆண்டுகள் நுழைய தடை செய்யப்பட்டது.

இந்த தண்டனைகளை தற்போது டில்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.  இது குறித்து முடிவெடுக்க தீர்ப்பாயத்துக்கு ஆணை இட்டுள்ளது.  தீர்ப்பாயத்தின் முடிவு வரும் வரை இவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும்,  அது வரை மாணவர்கள் தர்ணா, வேலை நிறுத்தம் போன்ற பல்கலைக்கழகத்துக்கு எதிராக எந்த வகை போராட்டமும் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.