கொரோனாவில் இருந்து குணமடைந்த டில்லி சுகாதார அமைச்சர் பணியைத் தொடங்கினார்

டில்லி

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த டில்லி சுகார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று மீண்டும் பணியை தொடங்கினார்.

 

டில்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா ஒழிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.  அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வது, சுகாதாரப் பணியாளர்களைச் சந்திப்பது எனப் பல நடவடிக்கைகளை நடத்தி வந்தார்.

அதன் காரணமாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு உடலில் ஆக்சிஜன் மிகவும் குறைந்ததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு முழுமையாகக் குணம் அடைந்து வீட்டுக்குத் திரும்பினார்.  அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.   இன்று அவர் மீண்டும் தனது பணியைத் தொடங்கி உள்ளார்