டில்லி தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….சட்டமன்ற குழு முன்பு ஆஜராக உத்தரவு

டில்லி:
டில்லி தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மற்றும் 2 அதிகாரிகள் சட்டமன்ற குழு முன்பு ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

டில்லியில் யாருக்கு அதிகாரம் என்ற பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் வருவார்கள் என்ற கருத்து அங்கு சர்சையாகியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் தலைமைச் செயலாளர் 3 பேரும் தாங்கள் கேட்ட தகவல்களை அளிக்க சட்டமன்ற குழு முன்பு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என்று சபாநாயகர் மற்றும் 2 குழு உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதை ஏற்ற நீதிபதி விபு பக்ரு 3 பேருக்கும் எச்சரிக்கை விடுத்தார். அதிகாரிகள் என்ற அடிப்படையில் 3 பேரும் ஆஜராக வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பாக கருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி