டெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்!

புதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

அதேநேரத்தில், டெல்லி மாநிலத்திற்கு, தடையற்ற மற்றும் பாதுகாப்பான ஆக்ஸிஜன் வழங்க வேண்டுமென, மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

மேலும், டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‍டெல்லியில் அமைந்த மேக்ஸ் மருத்துவமனைகள் இரண்டும், ஆக்ஸிஜனை பெற்றுள்ளதாக தெரிவித்ததையடுத்து, இந்த விசாரணையை, நாளைக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். அதேசமயம், உறுதியளிக்கப்பட்ட 480 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜனை, எந்தத் தடையுமின்றி டெல்லி அரசு, இன்றே பெற வேண்டுமென்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.