சென்னை:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு எதிராக டில்லி உயர் நீதி மன்றத்தில் அஸ்வினி உபாத்யாயா என்ற பாஜக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை டில்லி உயர்நீதி மன்றம்  தள்ளுபடி செய்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே, அவர் இந்து தீவிரவாதி என கூறினார்.

கமலின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கமல்ஹாசன் இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக கூறி டில்லி  உயர்நீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாயா மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழகத்தில் கமல் பேசியதற்கு டில்லி  உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது வாதாடிய உபாத்யாயா, கமல் பேசியது கடுமையான தேர்தல் விதி மீறல் என்பதால் தில்லி உயர்நீதி மன்றத்தை நாடினோம் என்று மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும் கமல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமும் தங்கள் தரப்பில் இருந்து விளக்கத்தை முன்வைத்தது.

இதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் நடந்த சம்பவத்திற்கு ஏன் டெல்லியில வழக்கு தொடுக்கிறீர்கள் என கூறி டெல்லிஉயர்நீதிமன்றம் பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்திருப்பதால், நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து கமலை அலைகழிக்கலாம் என்ற திட்டம் வீணாகி போனது.