டெல்லி:

பத்திரிக்கையாளர்கள் அர்னாப் கோஸ்வமி மற்றும் பிரேமா ஸ்ரீதேவி ஆகியோருக்கு எதிராக டைம்ஸ் நியூஸ் நெட்வொர்க் நிறுவனம் தொடர்ந்த காப்பரிமை மீறல், அறிவார்ந்த சொத்து திருட்டு வழக்கில் நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், ‘‘ ஒரு ஊழியர் வேலை அளிப்பவரது ரகசியம் காக்கப்பட வேண்டும் மற்றும் மிகவும் விசுவாசமாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இருவரும் கையொப்பமிட்டுள்ளனர். தற்போது அதை மீறியுள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அர்னாப் புதிதாக தொடங்கியுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியில் இரண்டு சிறப்பு செய்திகள் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஒன்று பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சிறையில் அடைக்கப்பட் டுள்ள முன்னாள் எம்பி சகாபுதீன் ஆகியோருக்கு இடையேயான உரையாடல். மற்றொன் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கருடன் பிரேமா ஸ்ரீதேவி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது பதிவு செய்யப்பட்ட உரையாடல் ஒளிபரப்பப்ட்டது.

இந்த இரண்டு உரையாடல்களும் அர்னாப் மற்றும் பிரேமா ஸ்ரீதேவி ஆகியோர் டைம்ஸ் நவ் தொலை க்காட்சியில் பணியாற்றியபோது பதிவு செய்யப்பட்டது என்று டைம்ஸ் நியூஸ் நெட்வொர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது.

இது குறித்து மும்பையில் கடந்த வாரம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியை நடத்தும் பிசிசிஎல் நிறுவனம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இந்த இரு உரையாடல்களும் தங்களது ரிபப்ளிக் நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டதற்கு என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.