நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை: டில்லி உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி:

நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்யப்படுவதாக டில்லி உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் காரணமாக மருந்து கடை உரிமையாளர்களின் இருண்ட வாழ்வு மீண்டும் ஒளியேற்றப்பட்டு உள்ளது.

மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை அமல்படுத்தி  பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிறுதொழில்கள் நலிவடைந்து வருகிறது. ஏராளமான சிறுவியாபாரிகள் தங்களது தொழிலை இழந்து கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆன்லைன் மருந்துக்கள் விற்பனை செய்வதற்கும் மத்தியஅரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது.  இந்த மருந்துகள் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு வரலாம் என கூறப்பட்டது.

இதன் காரணமாக மருந்து வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை அனுமதிக்கு எதிராக ஏற்கனவே நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்தி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டில்லி உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இன்று டில்லி உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  நாடு முழுவதும் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய  தடை விதிப்பதாக நீதிமன்றம்  தீர்ப்பளித்து உள்ளது.

ஆன்லைன் விற்பனை தடைக்கு ஆதவாக தீர்ப்பு வந்ததால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர், ஆனால், .இதனால் மத்திய அரசும், ஆன்லை மருந்து விற்பனை நிறுவனங்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.