ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டில்லி உயர்நீதி மன்றம் தடை

டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ-ல் கைது செய்யப்பட்டுள்ள  கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்து விசாரிக்க கோரியிருந்தது.

இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய வரும் 20ந்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ கைது செய்து விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் கைது செய்து விசாரிக்க சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கை டில்லி ஐகோர்டு விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி