புதுடில்லி:
மிழக முதல்வர் ஜெயலலிதா மீது, சசிகலாபுஷ்பா எம்.பி. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புகார் மனு
புகார் மனு

தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தகுத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டியும் சசி  சிகலா புஷ்பா எம்.பி. டெல்லி போலீசில்,  தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவாவை சட்டையை பிடித்து அடித்த விவகாரம், அதைத் தொடர்ந்து,அவரை விசாரித்த ஜெயலலிதா,  கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா

இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட சசிகலாபுஷ்பா,  தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தன்னை ஜெயலலிதா அடித்ததாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்  என்று அழுதுகொண்டே பாராளு மன்றத்தில் பேசி பாராளுமன்ற உறுப்பினர்களையும், இந்திய அரசியலையும் பரபரப்பாக்கினார்.
இதைத் தொடர்ந்து,  தனது எம்.பி.  பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் டில்லி ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்திருந்தார்.
பாராளுமன்றத்தில் கதறி அழுத சசிகலா
பாராளுமன்றத்தில் கதறி அழுத சசிகலா

டெல்லி போலீசில் புகார் மனு கொடுத்தது தொடர்பான வழக்கு நேற்று டெல்லி ஐகோர் ட்டில் விசாரணைக்கு வந்ததது.   மனுவை நேற்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.  அடுத்த விசாரணை  நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.