Random image

வாழச் சிறந்த பெருநகர பட்டியலில் டில்லிக்கு 6ம் இடம்

டில்லி:

மக்கள் வாழ்வதற்கான சிறந்த பெரு நகரங்கள் பட்டியலில் டில்லி 6ம் இடம் பிடித்துள்ளது.

குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு சார்பில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பெருநகரங்கள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து 10 பெருநகரங்கள் கொண்ட பட்டியலில் டில்லி 6ம் இடத்தில் உள்ளது.

சிறந்த வாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரம் தேடி மக்கள் பலர் டில்லியை நாடி வருகின்றனர். காற்று மாசு, பனிமூட்டம் போன்றவை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. டில்லி மக்கள் தொகை 1.8 கோடி. இது 2030க்குள் 4 கோடியாக அதிகரிக்கும்.

வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் இடம்பெற்றுள்ளது. முதல் 10 இடங்களில் 5 சீன நகரங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விபரம்: டப்ளின் (அயர்லாந்து), சான்ஜோஸ் (அமெரிக்கா), செங்டு (சீனா), சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா), பெய்ஜிங் (சீனா), டில்லி (இந்தியா), மணிலா (பிலிப்பைன்ஸ்), புஜோவு (சீனா), டியான்ஜின் (சீனா), ஷியான்மென் (சீனா).