பெரிய இலக்கு – தடுமாறி திணறும் டெல்லி அணி!

துபாய்: ஐதராபாத் அணி நிர்ணயித்த 220 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கிப் பயணிக்கும் டெல்லி அணி, 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டு 83 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது டெல்லி அணி.

தற்போதைய நிலையில், வெறும் 42 பந்துகளில் 137 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது டெல்லி அணி.

அதிரடி வீரர் ஷிகர் தவான் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். அவர் இம்முறை டக்அவுட். ரஹானே 19 பந்துகளில் 26 ரன்கள். ஸ்டாய்னிஸ் 5 ரன்கள்.

ஹெட்மேய்ர் 16 ரன்கள் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் 12 பந்துகளில் 7 ரன்கள். அக்சார் படேல் 4 பந்துகளில் 1 ரன்னுக்கு அவுட். ஆக, இப்படியான ஒரு மோசமான நிலையில் பரிதவித்துக் கொண்டுள்ளது டெல்லி அணி.

ஒரு கிரிக்கெட் பேரதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அந்த அணி இன்றையப் போட்டியில் வெல்லும் என்ற நிலை உள்ளது!