டெல்லி:

டெல்லி ஜீன்ஸ் தொழிற்சாலை ஒன்றில் இருந்து 26 கொத்தடிமை சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 22 மணி நேர வேலை, 2 வேலை சாப்பாடு, சுத்தியல் அடி என பல கொடுமைகளை சிறுவர்கள் சந்தித்துள்ளனர்.

டெல்லி ஆனந்தவிகார் ரயில் நிலையத்தில் 6 சிறுவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை சைல்டு லைன் தொண்டு நிறுவனம் கடந்த மாதம் 3ம் தேதி மீட்டது. அவர்கள் ஜீன்ஸ் தொழிற்சாலையில் இருந்து தப்பி வந்ததாகவும், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், பல சிறுவர்கள் அந்த தொழிற்சாலையில் அடைபட்டு கிடப்பதாக அந்த 6 பேரும் தெரிவித்தனர். இந்த தகவல் குழ ந்தைகள் நலக்குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனமும், போலீசாரும் அந்த தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

வடகிழக்கு டெல்லி சீலாம்பூர் பகுதியில் உள்ள ஜீன்ஸ் தொழிற்சாலையில் நடந்த சோதனையில் இருந்து 20 கொத்தடிமை சிறுவர்களை மீட்கப்பட்டனர். அவர்கள் 8 முதல் 13 வயது நிரம்பியவர்கள். அனைத்து சிறுவர்களும் ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தொழிற்சாலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தொழிற்சாலையில் 10 நிமிடத்தில் 10 ஜீன்ஸ்களில் நூல்களை வெட்டி பேக்கிங் செய்வது இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி. இந்த பணியை தாமதமாக செய்தால் சுத்தியால் கை விரலில் அடித்து தண்டனை கொடுத்துள்ளார் அந்த தொழிற்சாலை உரிமையாளர்.

கடந்த 6 மாதங்களாக அந்த தொழிற்சாலையில் வேலை செய்த 7 வயது ரஹீம் என்ற சிறுவன் கூறுகையில் ‘‘நாங்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு தூங்க அனுமதிக்கப்படுவோம். மீண்டும் 7 மணிக்கு எங்களை எழுப்பிவிடுவார்கள். பணியின் போது தூங்கி விழுந்தால் சுத்தியலால் அடித்து எழுப்பிவிடுவார். கடந்த 4 ஆண்டுகளாக தினமும் இரண்டு வேலைகள் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. உருளைகிழங்கும், சாதமும் வழங்கினர். இந்த வகை சாப்பாடு கடைசி வரை மாறவே இல்லை. எங்களது அறையை விட்டு ஒரு விநாடி கூட வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்கள். பணி குறைவாக செய்தால் விரலில் சுத்தியலால் அடிப்பார்கள்’’ என்றார்.

இது குறித்து நோபல் பரிசு பெற்ற கைலாஜ் சத்யர்த்தியின் தன்னார் தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,‘‘இங்கிரு ந்து மீட்கப்பட்ட சியாம் என்ற சிறுவனால் நடக்கி முடியவில்லை. நாங்கள் தூக்கிக் கொண்டு தான் வந்தோம். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து சிறுவர்களுக்கும் காயம் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடும் உள்ளது. இது போன்ற ஒரு கொடுமையை நாங்கள் எங்குமே பார்த்தது கிடையாது. மாதந்தோறும் 5 புதிய சிறுவர்கள் இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இந்த அமைப்பு வடக்கு டெல்லியில் புராரியில் முக்தி ஆஸ்ரம் என்ற குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வருகின்றது. மீட்கப்பட்ட சிறுவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு சாதாரன வாழக்கை வாழ தொடங்கியுள்ளனர்.

லக்கி என்ற சிறுவன் கூறுகையில்,‘‘ சிறிய அறையில் நாங்கள தங்க வைக்கப்பட்டோம். கடந்த 4 ஆண்டுகளாக சூரிய ஒளியையே நாங்கள் பார்த்தது கிடையாது. என்னை மீட்ட போது என்னால் கண்களை திறக்க முடியவில்லை. கண் கூச்சமாக இருந்தது. தினமும் குளிக்கவும், கழிப்பிடம் செல்லவும் அனுமதிப்பது கிடையாது. தினமும் 5,000 ஜீன்ஸ்களை பேக்கிங் செய்ய வேண்டும்’’ என்றான்.

அனைத்து சிறுவர்களும் பீகார் மாநிலம் மோத்திஹரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஆறு மாதங்களுக்கு முன் இவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 6 பேர் மட்டும் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களும் கடத்தி வரப்பட்டவர்கள்.

சத்தியார்தி கூறுகையில்,‘‘ கடந்த 1983ம் ஆண்டு மிசாப்பூர் தரைவிரிப்பு நிறுவனத்தில் இருந்து பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட 27 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அதன் பிறகு தற்போது 26 சிறுவர்கள் மீட்கப்படடுள்ளனர். 4 ஆண்டுகளாக சூரிய ஒளியை பார் க்காத இவர்களின் நிலையை கண்டால் மிகவும் பரிதாபமாக உள்ளது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதேபோன்ற ஒரு துன்புறுத்தலை சிறுவர்கள் சந்தித்துள்ளனர். அவர்களின் கைகளில் தீக்காயம், ஆயுதங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் உள்ளது. உடலிலும் அதிக காயங்கள் உள்ளது. குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. தலைநகரிலேயே இந்த நிலை. அடிமைத்தனம் தற்போதும் உள்ளது. குழந்தைகளு க்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

நாம் விழித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குழந்கைகள் நட்புடன் பழகும் நீதிமன்றங்கள் வேண்டும். இவை நடந்தால் நமது குழந்தைகள் நியாத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது’’ என்றார்.

இந்தியாவில் தான் நவீன கொத்தடிமைகள் அதிகம் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 18 மில்லியன் பேர் மீடகப்பட்டுள்ளனர். இதில் கொத்தடிமை தொழிலாளர்கள், வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளர்கள், குழந்தை பணியாளர்கள் அடக்கம்.