டில்லி

டில்லியில் இருந்து லக்னோ செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரு ரெயில்கள் தனியார் வசம் அளிக்கப்பட உள்ளன.

ரெயில்களின் சேவையை மேம்படுத்த சோதனை முறையில் 100 நாட்களுக்கு மத்திய அரசின் ரெயில்வே துறை ஒரு சில ரெயில்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக  அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கங்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடெங்கும் உள்ள அனைத்து ரெயில்வே தொழிற்சங்கங்களும் இதை எதிர்த்து போராட்டம் உள்ளதாக அறிவித்தன.

டில்லி – லக்னோ இடையே செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் கடந்த 2016 ஆம் வருடம் முதலே சேவையில் இருந்தாலும் இந்த மாதம் ஜூலை 10 முதல் அதன் நேரம் மற்றும் நிறுத்தங்கள் மாற்றப்பட்டு புதிய சேவையாக தொடங்குகிறது. அரசின் 100 நாள் சோதனை திட்டத்தின் கீழ் முதல் முதலாக டில்லி – லக்னோ செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனியார் வ்சம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ரெயில் ஆகும். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர், “மொத்தம் இரு ரெயில்கள் சோதனை அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது இதில் முதல் ரெயிலாக டில்லியில் இருந்து லக்னோ செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தேர்வு செய்யபட்டுள்ளது. விரைவில் இன்னொரு ரெயிலும் தனியார் மயமாக்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.