எவரெஸ்ட்டில் ஏறிய ஆதித்யா குப்தாவின் திகில் அனுபவம்

மீரட்:

எவரெஸ்ட் சிகரத்தை அடைய முறையான பயிற்சிகள் தேவை என்கிறார் டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா குப்தா.


கடந்த மே மாதம் 22-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு வந்த திகில் நினைவுகளைப்   பகிர்ந்து கொள்கிறார் ஆதித்யா குப்தா.

எவரெஸ்ட் மலையில் ஏற முயற்சித்த அஞ்சலி என்ற பெண் இறந்துபோனார். அஞ்சலியின் உடலை கீழே கொண்டு வரும் பணியில் அவரது கணவர் ஈடுபட்டார்.

மருத்துவமனையில் சாவதைவிட மலையில் சாவதே மேல் என்று அவர் மனைவி நகைச்சுவையாக கூறுவாராம்.  இந்த வார்த்தை உண்மையாகும் என்று யார் அறிவார்.

ஒரு சில மலைகளில் ஏறவிட்டாலே, எவரெஸ் சிகரத்தில் ஏறிவிடமுடியாது. இது ஒரு நீண்ட கால திட்டமிடல். நான் என் எடையை குறைத்தேன். 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து என் உடலை தயார்படுத்திக் கொண்டேன்.

5 மீட்டர் கயிற்றின் துணையுடன்தான் மலை ஏறுகிறார்கள். இறந்துபோனவர்களின் உடல்கள் கயிற்றுடன் கிடந்ததை பார்க்க முடிந்தது.
இந்த ஆண்டு மட்டும் மலை ஏறியவர்களில் 11 பேர் இறந்துள்ளனர்.

முறையான மலையேற்ற பயிற்சி இல்லாததும் எவரெஸ்ட் சிகரம் ஏறுவோர் இறக்க காரணம்.
கடந்த 60 ஆண்டுகளில் எவரெஸ்ட் மலை ஏற முயன்று 300 பேர் இறந்துள்ளனர்.

நான் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஏறியபோது, சில உடல்களைப் பார்த்தேன்.
எவரெஸ்ட் சிகரத்தை ஏற வேண்டும் என்பது ஒவ்வொரு மலையேற்றம் செய்வோரின் கனவு.
அதனை முறையான பயிற்சியுடன் செய்வது அவசியம் என்றார்.

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: wrenching experience, மலையேற்றம்
-=-