முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு: டில்லி தலைமை செயலகத்தில் பரபரப்பு

டில்லி:

டில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தலைமை செயலக வளாகத்தில் மர்ம நபர் மிளகாய் பொடி வீசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென மிளகாய் பொடியை தூவினார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டில்லி தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இருந்து இன்று மதியம் உணவு இடை வேளைக்காக சுமார்  2 மணி அளவில் வெளியே வந்த கெஜ்ரிவால் மீது மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி தூவினார்.

மிளகாய் பொடியை தூவியவர் பெயர் அனில்குமார் என்றும்,  அவர் கெஜ்ரிவாலிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மிளகாய் பொடியை தூவியதாகவும், இதில் கெஜ்ரிவாலின் கண்ணாடி உடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனில்குமார்

இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர், மிளகாய் பொடியை தூவியவரை கைது செய்துள்ளதாகவும்,  தலைமை செயலக வளாகத்தில் இருந்த மிளகாய் பொடி உள்ள கவரை கைப்பற்றி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜகவுக்கு எதிராக கடுமையாக பேசி வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி