விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியது டில்லி விமானி!

ந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி டில்லியை சேர்ந்த பவ்யே சுனேஜா என்பவர் என தெரிய வந்துள்ளது.</p>

இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் நிறுவனம் செயல்பட்டுவருகிறது.  இந் நிறுவன விமானங்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

அந்நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம்  ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

 

வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து கிளம்பியது. அதில் 8 பணிப்பெண்கள், 2 விமானிகள், 2 குழந்தைகள், ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் பயணித்தனர். விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் ஜகர்தாவிமான நிலையத்தில் கூடினர்.

இதற்கிடையே  விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. தேடுதலில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது, தெரியவந்தது. அதில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டனர்.

விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதக்கின்றன. அவற்றை மீட்கும் பணி நடந்து வருகிறது.மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவர் டில்லியைச் சேர்ந்த பவ்யே சுனேஜா என்ற விமானி என்பது தெரிய வந்துள்ளது. கிழக்கு டில்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியை சேர்ந்தவர் இவர். இவருடன்  துணை விமானை ஹர்வினோவும் விமானத்தை இயக்கியுள்ளார்.  பவ்யே சுனேஜா, கடந்த 2011 ஆம்  வருடம் லயன் ஏர் நிறுவனத்தில் விமானியாக பொறுப்பேற்றார்.

சமீபத்தில்தான் இந்தியாவுக்கு வந்து பணியாற்ற விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அதற்குள் விமான விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.