முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க உள்ள டில்லி மெட்ரோ

டில்லி

டில்லி மெட்ரோ ரெயில் 100% சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குவதற்கு தேவையான பணிகள் நடைபெற உள்ளன.

டில்லி மெட்ரோ ரெயில் சேவையில் மின்சார தேவை அதிக அளவில் உள்ளது. இதற்காக டில்லி மெட்ரோ ரெயில் சேவை நிறுவனம் பசுமை திட்டமாக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவித்து வருகிறது.  டில்லி மெட்ரோ ரெயில் சேவை நிறுவனம் மத்தியப் பிரதேசம் ரேவா மின் நிலையத்திடம் இருந்து சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை இனி பயன்படுத்த உள்ளது.

இதன் முதல் கட்டமாக  ஜவகர்லால் நேரு ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய தலைமை செயலகம் ரெயில் நிலையம் வரை சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை டில்லி மெட்ரோ ரெயில் நிறுவனம்  உபயோகப்படுத்த தொடங்கி உள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து 27 மெகாவாட் சூரிய மின்சாரம் பெற்று வரும் டில்லி மெட்ரோ விரையில் 99 மெகாவாட் மின்சாரம் பெற உள்ளது.

வரும் 2021 க்குள் டில்லி மெட்ரோ சேவையின் 100% மின்சாரமும் சூரிய ஒளி மூலம் பெற உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மத்திய பிரதேச ரேவா மின் நிலைய மேலாளர் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர்.