உடல்நிலையில் திடீர் முன்னேற்றம்: கொரோனா பாதித்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பொது வார்டுக்கு மாற்றம்

டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட, அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

17ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியது உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைய ஆக்சிஜன் உதவி வழங்கப்பட்டது. பின்னர் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததால் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அளித்து வந்த ஆக்சிஜன் உதவியும் நீக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி