டெல்லி எச்சரிக்கை ஆட்டம் – 13 ஓவர்களில், 2 விக்கெட்டுக்கு 86 ரன்கள்!

சென்னை: மும்பைக்கு எதிரான போட்டியில், 138 ரன்கள் இலக்கை விரட்டிவரும் டெல்லி, தனது துரத்தலில் அதிக நிதானத்தைக் கடைப்பிடிக்கிறது.

ஏனெனில், கடந்த 2 போட்டிகளிலும், தான் எடுத்த குறைந்த ரன்களைப் பாதுகாத்து, வெற்றிபெற்ற மும்பை அணி. எனவே, இலக்கு எளிது என்ற நிலையில், விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்தில் ஆடிவருகிறது டெல்லி அணி.

தற்போதைய நிலையில், 42 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், டெல்லியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன.

பிரித்விஷா 7 ரன்களில் அவுட்டாக, ஷிகர் தவன் 34 பந்துகளில், 34 ரன்களை எடுத்துள்ளார். ஸ்மித் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது, தவானுடன் களத்தில் நிற்பவர் லலித் யாதவ்.

பந்துகளைவிட, 10 ரன்களே அதிகம் தேவை என்ற நிலையில், டெல்லி அணி, எப்படியும் வெல்லும் என்றே கணிக்கப்படுகிறது.