சென்னை,

ரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கின் விசாரணைக்கு டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை  சென்னை அழைத்து வந்ததுள்ளனர் டெல்லி குற்றப்பிரிவு போலீசார்.

தேர்தல் கமிஷனா முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தைப் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து டிடிவி தினகரனிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவில் எடுத்தது டில்லி போலீஸ்.

 

டி.டி.வி.தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார் ஜுனாவையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

இன்று அவர்கள் இருவரையும் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னையில் இந்த வழக்கு சம்பந்தமாக இருவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் விசாரணை நடத்த டில்லி போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இருவரையும, பெங்களூர், கொச்சி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இன்று சென்னை வந்த டிடிவி தினகரனுடன், டில்லி போலீஸ் உதவிக் கமி‌ஷனர் சஞ்சய் சகாவத் தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் வந்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து கிளம்பி போலீசார் நேராக சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணை நேர்மையாக நடைபெறும் பட்சத்தில், டிடிவி தினகரனுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள் சிலரும் சிக்குவார்கள் என தெரிகிறது.