குண்டர்களால் அடித்து கொல்லப்பட்ட காவல்துறை எஸ்.ஐ.! டில்லியில் பரபரப்பு

டில்லி:

டில்லி காவல்துறையை சேர்ந்த எஸ்.ஐ. ராஜ்குமார், குண்டர்களால் தாக்கப்பட்ட கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில்  பரபரப்பான துவாரகா மோர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சொத்து பிரச்னை காரணமாக இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அவரை கட்டுப்படுத்த காவல்துறையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில்,விகாஸ் தலால் என்பவர் சுட்டுக்கொல்லப் பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டில்லி காவல்துறையை எஸ்.பி.ராஜ்குமார் என்பவர் இரவு உணவுக்காக காவல் நிலையத்தை விட்டு வெளியே நடந்து சென்றார்.  விவேக் விஹார் பகுதியில் ஒரு கும்பல் தகராறு செய்து கொண்டிருந்தது. அதைகண்ட எஸ்ஐ ராஜ்குமார் தனது மொபைல் போன் மூலம் அவர்களை வீடியோக எடுத்தார். இதைக்கண்ட குண்டர் ஒருவன் எஸ்மீது தாக்குதல் நடத்தினான். அப்போது, அவர்களை ராஜ்குமார் எச்சரித்ததாகவும், இதையடுத்து

எஸ்.ஐ. ராஜ்குமார் கடமையில் இருந்தார் மற்றும் இரவு நேரத்திற்குப் பிறகு நடந்து சென்றார், அவர் குற்றவாளிகளை போலீசார் வாதிட்டதாக குற்றஞ்சாட்டினார். ராஜ் குமார் தனது தொலைபேசியை எடுத்துக் கொண்டு, இந்த வீடியோவை பதிவு செய்தார், குண்டர்கள் ஒருவர் அவரை தாக்கத் தொடங்கினார். ராஜ்குமார் அவரை எச்சரித்தார் போது மேலும் பலர் சேர்ந்து அவரை தாக்க முயன்றதால், அவர் அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தார்.

ஆனால், குண்டர்களை அவரை விடாமல் துரத்திச்சென்று தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் எஸ்.ஐ ராஜ்குமார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதி வைத்தனர். அங்கு அவர் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய டி.சி.பி. (ஷாஹ்தாரா) மேகனா யாதவ், கொலை வழக்கின் ஒரு பிரிவினர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளில் ஒருவரான அந்த பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். எஸ்ஐ ஒருவரை குண்டர்கள் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி