டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: துப்பாக்கியால் சுட்ட எஸ்ஐ

டெல்லி: தலைநகர் டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை எஸ்ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அலிபூர் பகுதியின் கர்னல் சாலையில் காயம் அடைந்த நிலையில் ஒரு பெண் கிடப்பதை அவ்வழியே ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்த்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் நடைபெற்ற விசாரணையில் அந்த பெண்ணை, அவரது காதலரும், சப் இன்ஸ்பெக்டருமான சந்திப் தஹியா என்பவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது தெரியவந்தது.

இது குறித்து டெல்லி துணை கமிஷனர் கவுரவ் சர்மா கூறி இருப்பதாவது: மருத்துவமனைக்கு செல்லும் வழியில், காயமடைந்த பெண் தில்லி காவல்துறை துணை ஆய்வாளர் சந்தீப் தஹியாவால் சுட்டுக் கொல்லப்பட்டதாக என்னிடம் சொன்னார். தற்போது லாகோரி கேட் காவல் நிலையத்தில் அவர் பணியில் உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவரும், தாஹியாவும் தனது காரில் வெளியே வந்ததாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, அவர் தமது துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றார் என்று அந்த பெண் கூறினார் என்று தெரிவித்தார்.