புதுடெல்லி: நரேந்திர மோடி அரசின் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, 3 பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

நாட்டையும் மக்களையும் துண்டாடும் சட்டம் என்று கடுமையாக விமர்சிக்கப்படும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசின் அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் மோசமான ஆபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், மோடி & அமித்ஷா கூட்டணியோ, நாட்டின் கவனத்தை வேறு ஒன்றின்பால் திசைதிருப்பி செலுத்திக் கொண்டுள்ளது.

ஏற்கனவே, டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மாணாக்கர்கள் போராட்டம் நடத்தி, பாதுகாப்பு படையினருடன் மோதல் நடைபெற்றது. இந்நிலையில் தெற்கு டெல்லிப் பகுதியில் மாணாக்கர்கள் நடத்தியப் போராட்டத்தில் வன்முறை வெடித்து, 3 பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைதி காக்க வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.