சமனில் முடிவடைந்த டெல்லி – பஞ்சாப் இடையிலான ஆட்டம்!

துபாய்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்துள்ளது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத்தொடங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில், டெல்லி அணியைப் போலவே 8 விக்கெட்டுகளை இழந்து சரியாக 157 ரன்களை எடுத்தது.

அந்த அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான கேஎல் ராகுல் 21 ரன்கள் மட்டுமே அடிக்க, மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 60 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார்.

கிருஷ்ணப்பா கெளதம் 20 ரன்களை அடித்தார். சர்பராஸ் கான் 12 ரன்களை அடித்தார்.

டெல்லி அணி சார்பில், ரபாடா, அஸ்வின் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.