டில்லி,

சிரமத்தில் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வந்த புகாரை தொடர்ந்து ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் தலைமறைவானார்.

ஏற்கனவே பலாத்கார சாமியார் ராம் ரஹிம் ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் சாமியார்களின் மோசடிகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கி உள்ளன.

டில்லியில், ரோகிணி பகுதியில் அதயாத்மிக் விஸ்வித்யாலியா ( Adhyatmik Vishwavidyalya) என்ற பெயரில் பள்ளியும் ஆசிரமும் நடத்தி வருபவர் சாமியார் வீரேந்திர தீக்சித். இவர்மீது ஏற்கனவே பள்ளி மாணவிகள் பாலியல் புகார் கூறியிருந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவர் தனது ஆசிரமத்தில் பெண்களை அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்வதாக புகார் வந்தததை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதையறிந்த போலீசார்  வீரேந்திர தீக்சித் தலைமறைவானார்.

மகளிர் ஆணையத்தின் துணையுடன் அந்த ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது,  ஆன்மீகத்தின் பெயரால் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லைபடுத்தி வந்த பெண்கள் பலர் மீட்கப்பட்டனர்.

பல பெண்கள்  அங்கு பரிதாபகரமான நிலையில் காணப்பட்டதாகவும்,  இரும்புக்கதவுகளுக்குப் பின்னும் மின்வேலிகளுக்குள்ளும் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருந்ததும் சோதனையின்போது தெரிய வந்ததாக  போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் சாமியார் 40 நாட்களுக்குள் சரண் அடையும்படி டில்லி உயர்நீதிமன்றமும் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.