காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வீட்டில் புகுந்த மர்மநபர்கள்: பாதுகாவலர் மீது தாக்குதல், பைல்களுடன் ஓட்டம்

டெல்லி: காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் டெல்லி குடியிருப்பு மர்மநபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டார் என்றும் தெரிகிறது. இந்த தகவலை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுதி செய்திருக்கிறார். ஆதிர் ரஞ்சனின் வீட்டிற்கு 3 பேர் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

அவர்கள் முதலில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்க முனைந்து உள்ளனர். பின்னர் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தொடர்பான  3 கோப்புகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கின்றனர்.

மர்ம நபர்களின் தாக்குதலை தொடர்ந்து, இது குறித்த தகவலை ரஞ்சன் உதவியாளர் படேல் வெளியிட்டுள்ளார். ஆதிர் ரஞ்சன் வீட்டில் இல்லை என்பதை அறிந்ததும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்த வண்ணம் உள்ளனர்.

பைல்களுடன் தப்பியோடி போது, அந்த 3 பேரில் ஒருவர் சிக்கியிருக்கிறார். பின்னர் டெல்லி போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் ராகேஷ் நர்வால் என்பது தெரிய வந்திருக்கிறது.