டில்லி

ரசு மருத்தவமனைகளில் செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளை இலவசமாக 48 தனியார் மருத்துவ மனைகளில் டில்லி வாழ் மக்கள் செய்துக் கொள்ளலாம் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

”ஒரு நோயாளிக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சை தேவைப்படும் போது அரசு மருத்துவமனையில் இலவசமக செய்துக் கொள்ள முடியும்.  ஆனால் அது உடனடியாக அரசு மருத்துவமனையில் செய்ய முடியாமல் போகலாம்.  அல்லது அந்த அறுவை சிகிச்சக்கான வசதி டில்லியில் உள்ள எந்த மருத்துவமனையிலும் இல்லாமலும் இருக்கலாம்.  அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அரசு குறிப்பிட்டுள்ள 48 தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளலாம்.  அரசு அந்த மருத்துவமனைக் கட்டணத்தை செலுத்தி விடும்.

அரசு மருத்துவமனைகளில் அத்தகைய சிபாரிசு எந்த மருத்துவமனைக்கு செய்யப்படுகிறதோ, அங்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும்.   கொடுக்கப்பட்ட 48 மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து நோயாளிகளும் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து, அங்கு அறுவை சிகிச்சை செய்ய சிபாரிசு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.   ஆனால் அரசு மருத்துவமனையே முடிவாக தேர்ந்தெடுக்கும்.” என இதுபற்றி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள், அரசின் கடமை அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் கிடைக்கச் செய்வதே எனவும், அதற்கான ஏற்பாடுகளை விரைவில் டில்லி அரசு ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.

பாஜக கட்சியினர், இது அரசின் மேலும், முதல்வர் மேலும் உள்ள ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை  மீடியாவின் கண்களிலிருந்து திருப்ப நடக்கும் முயற்சி என்றும்,  தனியார் மருத்துவமனைகளின் மூலம் சிகிச்சை என்பது வேறொரு விதமான ஊழலை ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்தார்கள்