டெல்லி கலவரம் : 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம்  பெரும் கலவரம் வெடித்தது.

இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 583 பேர் படுகாயம் அடைந்தனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் சொத்துக்களும், அரசாங்க சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக டெல்லியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் சுமார் 750 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி காவல் நிலைய சிறப்புப் பிரிவு போலீசார் கலவரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கார்கர்டோமா நீதிமன்றத்தில் நேற்று 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் 15 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது. கொலை, தேசத்துரோகம், வன்முறையைத் தூண்டுதல்,கொள்ளை அடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் டெல்லி  வருகையின் போது கலவரம் செய்யத் திட்டமிட்ட சிலர், ’வாட்ஸ் –அப்’ குரூப்பை உருவாக்கி வன்முறையை ஏவி விட்டனர் என வழக்கை விசாரித்த உயர் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

-பா.பாரதி.